Friday, May 16, 2014


"தோரணப் பந்தலிலே"


தினம் தினம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு வகையான பாடல்களைக் கேட்கிறோம். சில சமயங்களில், அந்தப் பாடல்களின் சரியான அல்லது தெளிவான வரிகள் (Lyrics) கிடைக்காதா என்று தேடுவோம் இல்லையா? எனவே இந்த வலைப்பூவில் அதற்கான முயற்சிகள் அவ்வப்போது எடுக்கப்படும். அந்த வகையில் ஒரு கர்நாடக இசைப் பாடல் இதோ உங்கள் பார்வைக்கு!


பாடல்: தோரணப் பந்தலிலே 
இயற்றியவர்: மதுரை G S மணி
ராகம்: ஹமீர் (ஹிந்துஸ்தானி இசை ராகம்)
தாளம்: ரூபகம்



தோரணப் பந்தலிலே – பாண்டியன்
தோகைக் கயல்விழியின் கல்யாண வைபவமாம்

பூரணமாகவே பல்வகை மணியாரம்
புதுமலர் மாலையுடன் புன்சிரிப்புடன் நின்றாள் (தோரண)

மறை ஓதிட நான்முகனும் அமர்ந்திட
பிறைஅணி இறைவனும் சிறப்புடன் வந்திட

தன்திருக் கரத்தாலே திருமகள் தொழும் மாலே
தங்கையின் மலர்க்கரத்தை சுந்தரன் இடம் வைத்தான்

சந்தன குங்குமம் சேடிகள் தந்திட
வந்த விருந்தினர் சிந்தை மகிழ்ந்திட
”விந்தை! விந்தை!” என தேவ பூதகணம்
வியந்து அறுசுவை உணவு உண்டிட

கண்டிலாத பல சீர்வகை வந்திட
எண்ணிலாத நவரத்னம் குவிந்திட
மண்டலம் புகழ்ந்திட எங்கும் காணாத
மாபெரும் திருநாள் மதுரைத் தலமதில் (தோரண)



You can enjoy the song below:



No comments:

Post a Comment