Friday, August 1, 2014


சிவாஜியும் கொலைவெறியும்


Tuesday, July 29, 2014


"My name is Bond... James Bond."

(இது இந்த Blog-ல் நடுநடுவே தரப்படும் நொறுக்குத் தீனி அயிட்டம்!)



ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் ஜேம்ஸ் பாண்ட் தன்னைப் புதியவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஸ்டைல் உங்களுக்குத் தெரிந்திருக்கும். 

"My name is Bond! (ஒரு சின்ன smile கொடுத்து)
James Bond!"

இப்படித்தான் அவர் தன் பெயரைச் சொல்லுவார். 

இந்த ஜேம்ஸ் பாண்ட் ஒரு தடவை ஒரு தெலுங்குக்காரரைச் சந்திக்க நேர்ந்தது.

அவரிடம் கெத்தாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறார்.

 ”My name is Bond... (smiles and then says)... 
James Bond.”

And you?

இதற்கெல்லாம் சளைத்தவரா நம்ம தெலுங்கு அண்ணாச்சி?

அவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறார்.

My name is நாயுடு...
வேங்கட நாயுடு...
சிவ வேங்கட நாயுடு...
லக்‌ஷ்மிநாராயண சிவ வேங்கட நாயுடு...
ஸ்ரீனிவாசலு லக்‌ஷ்மிநாராயண சிவ வேங்கட நாயுடு...
ராஜசேகர ஸ்ரீனிவாசலு லக்‌ஷ்மிநாராயண சிவ வேங்கட நாயுடு...
சீதாராமாஞ்சனேயுலு ராஜசேகர ஸ்ரீனிவாசலு லக்‌ஷ்மிநாராயண சிவ வேங்கட நாயுடு...
பொம்மிராஜு சீதாராமாஞ்சனேயுலு ராஜசேகர ஸ்ரீனிவாசலு லக்‌ஷ்மிநாராயண சிவ வேங்கட நாயுடு...
கேதாரண்ய பொம்மிராஜு சீதாராமாஞ்சனேயுலு ராஜசேகர ஸ்ரீனிவாசலு லக்‌ஷ்மிநாராயண சிவ வேங்கட நாயுடு...

அவர் முடிப்பதற்குள்ளாகவே ஜேம்ஸ் பாண்ட் மயக்கம் போட்டு விழுகிறார்.

Monday, July 28, 2014


கருப்பு ஆடு வெள்ளை ஆடு



(இது இந்த Blog-ல் அவ்வப்போது தரப்படும் நொறுக்குத் தீனி அயிட்டம்!)















டி.வில live-ஆ ஒரு
விவசாயியை பேட்டி
எடுக்கறாங்க...

" உங்க ஆட்டுக்கு
என்ன சாப்பிட
குடுக்கறீங்க..? "

" கருப்பு ஆட்டுக்கா..?
வெள்ளை ஆட்டுக்கா..?! "

" வெள்ளைக்கு..! "

" புல்லு..! "

" அப்ப கருப்புக்கு..?! "

" அதுக்கும்
புல்லுதான்
குடுக்கறேன்..! "

" இதை எங்கே கட்டி
போடறீங்க..? "

" எதை..?
கருப்பையா..?
வெள்ளையையா..?! "

" வெள்ளையை..! "

" வெளில இருக்குற
ரூம்ல..! "

" அப்ப கருப்பு
ஆட்டை..?! "

" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "

" எப்படி
குளிப்பாட்டுவீங்க..? "

" எதை..?
கருப்பையா..?
வெள்ளையையா..?! "

" கருப்பு ஆட்டை..! "

" தண்ணில தான்...! "

" அப்ப
வெள்ளையை..?! "

" அதையும்
தண்ணிலதான்..! "

பேட்டி எடுக்கறவர்
இப்ப
கடுப்பாகி...

" லூசாய்யா நீ...
ரெண்டுக்கும் ஒரே
மாதிரி தானே
செய்யுறே... அப்புறம்
எதுக்கு திரும்ப
திரும்ப
வெள்ளையா..?
கருப்பானு..?
கேட்டுட்டே இருக்கே..?!"

" ஏன்னா வெள்ளை
ஆடு என்னுது..!! "

" அப்ப கருப்பு ஆடு..?!"
_
_
_
_
_
_
_
_
_
_
_
_
_
_
_

" அதுவும்
என்னுதுதான்..!"



Monday, June 16, 2014


ஹைக்கூ எழுத ஆசையா?

ஹைக்கூ - ஜப்பானிய கவிதை வடிவம். இதன் மிகச் சிறிய வடிவம் உலகம் முழுவதும் கவர்ந்து இப்போது உலகின் எல்லா மொழிகளிலும் ஹைக்கூ எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதை எல்லோரும் எழுத முயல்வதன் காரணம் ஹைக்கூ சிறியதாகவும், எளிமையாகவும், இயல்பானதாகவும், எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவற்றைப் புதிய கோணத்தில் பார்க்க வைப்பதாகவும் இருப்பது தான். ஆனால் ஹைக்கூ-விற்குத் தான் ஏராளமான விதிமுறைகள் உண்டு. கவிதைக்கு இடையூறாக இல்லாதவரை விதிமுறைகள் நல்லது தான். ராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்னதைப் போல 'விதிமுறைகள் இல்லாத கவிதை, நெட் இல்லாமல் டென்னிஸ் ஆடுவதைப் போன்றது'. மேலும் பாஸோவின் கோட்பாட்டையும் (ஜப்பானின் சிறந்த ஹைக்கூ கவி) நினைவில் கொள்வது நலம்.

'விதிமுறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்; பின் அதை மறந்து விடுங்கள்'.

மறப்பதற்கு முன் விதிமுறைகளைக் கற்பது அவசியம்.

எத்தனை விதிமுறைகள்?

'ஒரு சாதாரண உரைநடை வாக்கியத்தை மூன்று வரிகளில் உடைத்து எழுதினால் ஹைக்கூ ஆகி விடுமா?' என்ற கேள்விக்குக் கூட நேரடியாக பதில் கூற முடியாத அளவிற்கு இதன் விதிமுறைகள் மாறி விட்டன.

ஹைக்கூ-விற்கு விதிமுறைகள் மிக அதிகம். எல்லா விதிமுறைகளையும் மொத்தமாகப் பின்பற்ற யாராலும் இயலாது. பல விதிமுறைகள் ஒன்றுக்கொன்று முரணானவை. ஒரே சந்தத்தில் பின்பற்ற முடியாதாவை. ஆகையால் எழுதுபவரே தனக்கு ஏற்ற விதிமுறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

உங்களுக்கு ஏற்ற சில விதிகளை எடுத்துக் கொண்டு உங்கள் எண்ணங்கள், பாதிப்புகள், உணர்வுகளை எழுதத் தொடங்குங்கள். விதிகளை மீறாதீர்கள். கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் உங்களுடைய எல்லா ஹைக்கூவும் ஒரே மாதிரி இருப்பதாக உணர்வீர்கள்! அப்படி உணர்ந்தால் உங்களுடைய டென்னிஸ் நெட்டை இன்னும் கொஞ்சம் உயர்த்த வேண்டும் என்று பொருள். மேலும் ஒன்றிரண்டு விதிகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இது உங்களுக்குப் பிடித்த ஹைக்கூ கவிஞரின் கவிதைகளில் இருந்து நீங்கள் உணர்ந்து கொண்ட விதியாக கூட இருக்கலாம்.

இதோ சில விதிகள்:

ஒரே வரியில் 17 சொற்கள்.
மூன்று வரியில் 17 சொற்கள்.
மூன்று வரியில் 17 சொற்கள் 5 - 7 - 5 என்ற வரிசையில்.
சொற்கள் எண்ணிக்கையில்லாமல் மூன்று வரிகள் - நடு வரி மட்டும் சற்று நீளம்.
மூன்று வரிகள் மேலிருந்து கீழாக.
ஒரே மூச்சில் சொல்லக் கூடியவை.
மூன்று வரிகளையும் ஒன்றாய்ச் சேர்த்தால் ஒரே வாக்கியமாக இல்லாதிருத்தல்.
வாசிக்கும் போது நிறுத்தம் முதல் வரியின் கடைசியில் அல்லது இரண்டாம் வரியின் கடைசியில். ஆனால் இரண்டிலும் ஒரே சமயத்தில் கிடையாது.
எப்பொழுதும் நிகழ்காலத்தில் எழுதுதல்.
தெளிவான காட்சிகளையே உபயோகித்தல்.
ஜென் கற்று, வார்த்தைகளால் சொல்ல முடியாத காட்சிகளை விவரித்தல்.
உலகியல் காட்சிகளை அப்படியே கூறுதல்.
இயற்கைக் காட்சிகளை மட்டுமே உபயோகித்தல் (மனிதர்கள் இல்லாமல்).
எதுகை மோனை இல்லாமல் எழுதுதல்.

Saturday, June 14, 2014


Rubik's Cube



  May 18th 2014 was the 40th anniversary day of the Rubik’s Cube invention. This is the classic Rubik’s Cube game. In this game there is a cube composed of 27 blocks (9 blocks on each face), you need to rotate the rows of blocks until the colours of the blocks in each of the faces are the same. A tips will be provided below to tell you how to play this game.

Click here or on any one of the Images of this post to play Rubik's Cube online!


Tips to play Rubik's Cube


There are many ways to solve Rubik's Cube, but they all involve the use of formulas to move the blocks. Some solutions require the use of more than 50 formulas which is rather difficult to learn. The following is a set of 3 formulas invented by late Mr. Ngai Shing Lee, and this set of formulas is easy to learn and remember. Note that a lot of moves is needed and you cannot solve the puzzle extremely quickly, but eventually you will be able to solve it.


The basic concept is to solve the corners first and then the edges. This is based on a simple observation that moving the middle rows alone will not disrupt the corners.

The basic procedure is as follows:
  1. Move the four corners of one face to their correct positions and correct orientations (you should not need any formulas for this)
  2. Use formula A to move the remaining four corners to their correct positions but not necessarily in correct orientations
  3. Use formula B to rotate the remaining corner blocks to their correct orientations. Now all eight corners should be correct
  4. Use formula C to move the edges to their correct positions
All three formulas will move the blocks in the bottom face while keeping the top face intact. The basic step in the formulas is to "remove a block from the top face and then put it back".


Wednesday, June 11, 2014


அந்த உதிர்ந்த மலர்கள்!


"பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே! புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே!" என்ற பாடல் வரிகளைக் கேட்டிருப்பீர்கள்! 

அதுபோல, மடங்களின் அறைகளிலும், மனிதர்களின் வீடுகளின் மச்சுகளிலும், தாழ்வாரங்களிலும், பூட்டிக் கிடந்த பழைய அறைகளிலும், இன்ன பிற இடங்களிலும், யாரும் பாராமல், மூலைமுடுக்குகளில் தூக்கிப் போடப்பட்டு, காலமும் கரையான்களும் போட்டி போட்டுக் கொண்டு தின்று கொண்டிருந்த, தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடித் தேடி அந்தக் காலத்தில் ஒரு மனிதர் அலைந்தார்.  "பத்துப் பாட்டில்" ஒன்றான "குறிஞ்சிப் பாட்டு" ஓலைச் சுவடிகள் கிடைத்தபோது, அதில் சில ஓலைகளைக் காணாததால், அந்தக் குறிஞ்சிப் பாட்டுச் செய்யுள்கள் பட்டியலிட்டுக் காட்டிய 99 வகையான மலர்களில், சில மலர்களின் பெயர்கள் என்னவென்று கண்டுபிடிக்க முடியாமல் போய்விட, அந்தச் சில "உதிர்ந்த மலர்களைத்" தேடி, அந்த ஓலைச் சுவடிகளின் பிரதிகளுக்காய் அவர் அலைந்த அலைச்சலை என்னவென்பது?  இப்படி ஓலைகளைத் தேடி அலைந்து மறைய இருந்த பல தமிழ் இலக்கியங்களை உயிர்ப்பித்தவர்தான் திரு. உ.வே.சாமிநாதய்யர்!

உ.வே.சா. அவர்களின் "நல்லுரைக் கோவை-நான்காம் பாகம் (கட்டுரைகள்)" என்ற நூலில் உள்ள "உதிர்ந்த மலர்கள்" என்ற ஐந்தாவது கட்டுரையை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.

(உ.வே.சா.வின் அந்தக் கட்டுரையப் படிக்கக் கீழே உள்ள link-ஐ 'க்ளிக்’ செய்க!

"நல்லுரைக் கோவை-நான்காம் பாகம் (கட்டுரைகள்)"

 "உதிர்ந்த மலர்கள்"  இதில் ஐந்தாவது கட்டுரையாக வருகிறது!)

காணாமல் போய் ஆட்டம் காட்டி, அவரைப் பாடாய்ப் படுத்திய அந்தப் பொல்லாத மூன்றே மூன்று உதிர்ந்த மலர்களும், கடைசியில் ஒருவழியாக அவருக்குக் கிடைத்தே விட்டன! தருமபுரம் ஆதீனத்து மடத்தில், 'பழைய ஒன்றுக்கும் உதவாத ஓலைகள்' என்று நினைத்து, ஆடிப் பதினெட்டாம் பெருக்கு தினத்தில் காவிரி ஆற்றில் கொண்டு போய்ப் போடப்பட இருந்த அந்த ஓலைகள், தப்பிப் பிழைத்து, அவரின் கண்களுக்குத் தென்பட்டு விட்டன! அந்த ஓலைகளில் ஒன்றில் தான் இந்த உதிர்ந்த மூன்று மலர்களைப் பற்றிய வரிகள் இருந்தன! ஆம்! தமிழ்த் தாயின் முக்கிய ஆபரணங்களில் ஒன்றான "குறிஞ்சிப் பாட்டு" கடைசியில் முழுமையாகக் கிடைத்தே விட்டது! 

அந்தக் "குறிஞ்சிப் பாட்டு" சுட்டிய 99 வகை மலர்களின் பெயர்களையும் இப்பொழுது முழுமையாகப் பார்ப்போம்!

இதோ அந்த 99 மலர்களின் பெயர்கள்:

  1. காந்தள்
  2. ஆம்பல்
  3. அனிச்சம்
  4. குவளை (செங்கழுநீர்ப்பூ)
  5. குறிஞ்சி
  6. வெட்சி
  7. செங்கோடுவேரி
  8. தேமா 
  9. மணிச்சிகை (செம்மணிப்பூ)
  10. உந்தூழ் (பெருமூங்கில்)
  11. கூவிளம் (வில்வம்)
  12. எறுழம்
  13. கள்ளி (மராமரப்பூ)
  14. கூவிரம் 
  15. வடவனம்
  16. வாகை
  17. குடசம் (வெட்பாலைப்பூ)
  18. எருவை (பஞ்சாய்க்கோரை)
  19. செருவிளை (வெண்காக்கனம்)
  20. கருவிளை (கருவிளம்பூ)
  21. பயினி
  22. வானி
  23. குரவம்
  24. பசும்பிடி (பச்சிலைப்பூ)
  25. வகுளம் (மகிழம்பூ)
  26. காயா (காயாம்பூ)
  27. ஆவிரை
  28. வேரல் (சிறுமுங்கில் பூ)
  29. சூரல் (சூரைப்பூ)
  30. குரீஇப்பூளை (சிறுபூளை, கண்ணுப்பிள்ளை என்னும் கூரைப்பூ)
  31. குறுநறுங்கண்ணி (குன்றிப்பூ)
  32. குருகிலை (முருக்கிலை)
  33. மருதம்
  34. கோங்கம்
  35. போங்கம் (மஞ்சாடிப்பூ)
  36. திலகம்
  37. பாதிரி
  38. செருந்தி
  39. அதிரல் (புனலிப்பூ)
  40. சண்பகம்
  41. கரந்தை (நாறுகரந்தை)
  42. குளவி (காட்டுமல்லி)
  43. மாம்பூ
  44. தில்லை
  45. பாலை
  46. முல்லை
  47. குல்லை (கஞ்சங்கொல்லை)
  48. பிடவம்
  49. சிறுமாரோடம் (செங்கருங்காலிப்பூ)
  50. வாழை
  51. வள்ளி
  52. நெய்தல்
  53. தாழை (தெங்கிற்பாளை)
  54. தளவம் (செம்முல்லைப்பூ)
  55. தாமரை
  56. ஞாழல்
  57. மௌவல்
  58. கொகுடி
  59. சேடல் (பவளக்கான் மல்லி)
  60. செம்மல் (சாதிப்பூ)
  61. சிறுசெங்குரலி (கருந்தாமக்கொடிப்பூ)
  62. கோடல் (வெண்கோடற்பூ)
  63. கைதை (தாழம்பூ)
  64. வழை (சுரபுன்னை)
  65. காஞ்சி
  66. நெய்தல் (கருங்குவளை)
  67. பாங்கர் (ஓமை)
  68. மராஅம் (மரவம்பூ, வெண்கடம்பு)
  69. தணக்கம்
  70. ஈங்கை (இண்டம்பூ)
  71. இலவம்
  72. கொன்றை
  73. அடும்பு (அடும்பம்பூ)
  74. ஆத்தி
  75. அவரை
  76. பகன்றை
  77. பலாசம்
  78. பிண்டி (அசோகம்பூ)
  79. வஞ்சி
  80. பித்திகம் (பிச்சிப்பூ)
  81. சிந்துவாரம் (கருநொச்சிப் பூ)
  82. தும்பை
  83. துழாஅய் (துளசி)
  84. தோன்றி
  85. நந்தி (நந்தியாவட்டைப்பூ)
  86. நறவம் (நறைக்கொடி)
  87. புன்னாகம்
  88. பாரம் (பருத்திப்பூ)
  89. பீரம் (பீர்க்கம்பூ)
  90. பைங்குருக்கத்தி (பசிய குருக்கத்திப்பூ)
  91. ஆரம் (சந்தனம்)
  92. காழ்வை (அகில்)
  93. புன்னை
  94. நரந்தம் (நாரத்தம்பூ)
  95. நாகம்
  96. நள்ளிருள்நாறி (இருவாட்சிப்பூ)
  97. குருந்தம்
  98. வேங்கை
  99. புழுகு (செம்பூ) 
மேலே காட்டிய 99 மலர்களில்,  8,9, மற்றும் 10 ஆவதாகக் காட்டப்பட்டுள்ள 'தேமா, மணிச்சிகை, உந்தூழ்'  என்ற இந்த மூன்று மலர்களே உதிர்ந்து போய் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட மலர்களாகும்!



Capitals and Countries


The following is the list of Capitals and Countries of the world. 
If you want to know more about any Capital or Country, 
just 'click' on that name!



பச்சிலைச் சாறும் பயன்பாடும்


அருகம்புல் சாறு – இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்; வாய்ப் புண் ஆற்றும்;
மற்றும் தாய்ப்பால் சுரக்க உதவும்.

வாழைத் தண்டுச் சாறு – சிறுநீரகக் கல்லை அகற்றக் கூடியது; மூட்டு வலியை நீக்கும்; உடல் எடையைக் குறைக்கும்; ஊளைச் சதையைக் குறைக்க உதவும்.

வெள்ளைப் பூசணிச் சாறு – குடற் புண்ணை நீக்கும்.

வல்லாரைச் சாறு – நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும்; ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

வில்வச் சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது; நரம்பு
சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் உகந்தது; சர்க்கரையின் அளவைக் குறைக்க வல்லது; சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுவது.

கொத்தமல்லிச் சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.

புதினாச் சாறு – இருமலைக் குணப்படுத்தும்; முகப் பருவை நீக்க வல்லது; மற்றும் அனைத்து ரத்த சம்பந்தமான, வாயு சம்பந்தமான நோய்களுக்கும் ஏற்றது.

நெல்லிக்காய்ச் சாறு - அழகு தரும் மருந்து.

துளசிச் சாறு - சளி மற்றும் சோம்பேறித்தனத்தைக் குறைக்க வல்லது. ஆனாலும் ஓர் எச்சரிக்கை! அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்ளுவது விந்தணுவைக் குறைத்துவிடும்.

அகத்திச் சாறு- மலச்சிக்கலைக் குணப்படுத்தும்; சர்க்கரை நோயைக் குணப்படுத்தும்.

கடுக்காய்ச் சாறு - முகம் நல்ல பொலிவாகும்; கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது.

முடக்கத்தான் சாறு - மூட்டு வலிக்கு நல்லது; வாயுத் தொல்லைக்கு
நல்லது.

கல்யாண முருங்கைச் சாறு - உடல் எடையைக் குறைக்க உதவும்; இதை
வாயில் மென்று உமிழ் நீருடன் கலந்து சாப்பிட்டால், உடனடியாக
மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை நீங்கும்; ஆனாலும் ஓர்  எச்சரிக்கை! கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது இல்லை; கருவைக் களைக்கக் கூடியது.

தூதுவளைச் சாறு - சளித் தொல்லை நீங்கும்.

ஆடாதொடைச் சாறு - 'ஆஸ்துமாவைக்' குணப்படுத்த வல்லது.

கரிசலாங்கண்ணிச் சாறு - கண் பார்வைக்கு நல்லது; முடி வளர்ச்சிக்கு நல்லது.


Thanks: http://aanmikam.blogspot.in

Tuesday, June 10, 2014


கொஞ்சம் தத்துவமும் கேட்டுக்குவோம்!




(இது இந்த Blog-ல் அவ்வப்போது தரப்படும் நொறுக்குத் தீனி அயிட்டம்!)



தத்துவம் நம்பர் 1:


This is the fact of life:
5 Apple cost Rs.60 ; 
Apple 5 costs Rs.60,000.
Position only matters!





தத்துவம் நம்பர் 2:


Pizza...always confuses us!
It comes in a square box.
When you open it, it is round.
When you start eating it, it is triangle!
Life and People are also like Pizza.
Look different;
Appear different;
Behave absolutely different!






Thursday, June 5, 2014


"சூஹா சாஹா"




ஏ. ஆர். ரஹ்மான் இசையில் வெளிவந்த
”ஹை வே” ஹிந்திப் படத்தில் இடம் பெற்ற
“சூஹா சாஹா” என்ற பாடலை
இப்பொழுது மஹிமா நடராஜன் (My daughter)
குரலில் கேளுங்கள்!




You can hear the song here below:



(You can also directly go to
http://www.muziboo.com
to listen to the song Sooha Saaha - சூஹா சாஹா
from the Hindi Movie Highway.)



சித்தர் நெறி - Part 1 of 2




(எனக்குப் படிக்கக் கிடைத்த அரிய விஷயங்களில் ஒன்று என்று இந்த ”சித்தர் நெறி” என்கின்ற தொகுப்பைச் சொல்லலாம்! ஒரு மாறுதலுக்காகவாவது, நீங்களும்தான் இதனைப் படித்து வையுங்களேன்!)



சித்தர்

அடியார்க்கு நல்லார், சித்தன் என்னும் சொல்லுக்குப் பொருளாகச் சித்தன் - கிருத கிருத்தியன், செய்ய வேண்டுவனவற்றைச் செய்து முடித்தவன், கன்மங்களைக் கழுவினவன், எண்வகைச் சித்திகளையும் உண்டாக்குகின்றவன் என்று விளக்குகிறார்.சித்தர்கள் கன்மங்களைக் கழுவி, எண்வகைச் சித்துகளை உண்டாக்கி, பக்தி நெறியல்லாத வேறொரு நெறியில் ஒழுகி இறைவனைக் கண்டு தெளிந்தனர் என்று அறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரும், மு. அருணாசலமும் தெரிவிக்கின்றனர்.

Wednesday, June 4, 2014


சித்தர் நெறி - Part 2 of 2




(இதைப் படிக்கும் முன் சித்தர் நெறி - Part 1 of 2 பகுதியைப் படிக்கவும்!)



சித்துகள்

‘சித்து’ எனப்படும் இயற்கை மீறிய (மீஇயற்கை) ஆற்றல் கைவரப் பெற்றவர்களாகச் சித்தர்கள் இருந்தனர் என்பதை அவர்களைப் பற்றிய செய்திகள் பலவும் வலியுறுத்துகின்றன. இதன் அடிப்படையில், ‘சித்துகள் கைவரப் பெற்ற அனைவரும் சித்தர்கள்’ என்று தீர்மானிக்க முயல்வது பொருந்தாது. அது உண்மைக்கு மாறானதுங்கூட.

சித்துகள் பொதுவாக எண் வகைப்படும். அவற்றை

அணிமா,
மகிமா,
லகிமா,
கரிமா,
பிராத்தி,
பிரகாமியம்,
ஈசாத்துவம்,
வசித்துவம்

என்று வடமொழியில் கூறுவர்.

Tuesday, May 20, 2014


எங்கே தேடுவேன்?




"கான ரீங்காரம் செய்யும் கருவண்டே! நீ தேனூறும் வாயாலே தில்லை நாதனிடம் என் நிலை சொல்லு!" என்ற ஓர் அருமையான பாடலை ஒரு தடவை கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்தது! 

ஓயாமல் அந்தப் பாட்டின் சில வரிகள் மட்டும் மூளையில், loop ஆகி, ஓடிக் கொண்டே இருக்க, முழுப் பாட்டின் வரிகளுக்காகவும் தவித்தது என் உள்ளம்! 

இன்றுபோல் Internet வசதிகள் இல்லாத காலம் அது! எனவே ‘நெட்’டில் தேடவும் வழியில்லை. (இப்பொழுது மட்டும் என்ன? Net-ல் தேடியும் கூட, அந்தப் பாடல் முற்றாகக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை!) 

எனவே, பாடத் தெரிந்தவர், தெரியாதவர், கண்டவர், காணாதவர், தெருவில் போனவர், போகாதவர், வந்தவர், வாராதவர் என்று கண்ணில் பட்டவர்களிடமெல்லாம், ”இந்தப் பாடலின் முழு வரிகளும், யாருக்காவது தெரியுமா? தெரியுமா?” என்று விடாமல் நச்சரிக்க ஆரம்பித்து, பின் அதுவே என் முழு நேரத் தொழிலாகிப் போனது! 

Monday, May 19, 2014


"Kanne ! Kalai Maane!”




A casual attempt of the song
"Kanne ! Kalai Maane!” (”கண்ணே! கலைமானே!”)
from the Tamil movie Moondraam Pirai, (மூன்றாம் பிறை)
composed by Ilaiyaraja.

While the original song features only a male voice,
here my son Nirmal Natarajan and my daughter Mahima Natarajan
have sung it in parallel!

The voices are recorded separately,
without any intention of merging them together.

But hey, playing them together in Audacity,
it sounded good and different! :)

You can listen to the song below:

(You can directly go to
www.muziboo.com
to listen to the song
”Kanne! Kalaimane!” - "கண்ணே! கலைமானே!")


Friday, May 16, 2014


"தோரணப் பந்தலிலே"


தினம் தினம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு வகையான பாடல்களைக் கேட்கிறோம். சில சமயங்களில், அந்தப் பாடல்களின் சரியான அல்லது தெளிவான வரிகள் (Lyrics) கிடைக்காதா என்று தேடுவோம் இல்லையா? எனவே இந்த வலைப்பூவில் அதற்கான முயற்சிகள் அவ்வப்போது எடுக்கப்படும். அந்த வகையில் ஒரு கர்நாடக இசைப் பாடல் இதோ உங்கள் பார்வைக்கு!


பாடல்: தோரணப் பந்தலிலே 
இயற்றியவர்: மதுரை G S மணி
ராகம்: ஹமீர் (ஹிந்துஸ்தானி இசை ராகம்)
தாளம்: ரூபகம்



தோரணப் பந்தலிலே – பாண்டியன்
தோகைக் கயல்விழியின் கல்யாண வைபவமாம்

பூரணமாகவே பல்வகை மணியாரம்
புதுமலர் மாலையுடன் புன்சிரிப்புடன் நின்றாள் (தோரண)

மறை ஓதிட நான்முகனும் அமர்ந்திட
பிறைஅணி இறைவனும் சிறப்புடன் வந்திட

தன்திருக் கரத்தாலே திருமகள் தொழும் மாலே
தங்கையின் மலர்க்கரத்தை சுந்தரன் இடம் வைத்தான்

சந்தன குங்குமம் சேடிகள் தந்திட
வந்த விருந்தினர் சிந்தை மகிழ்ந்திட
”விந்தை! விந்தை!” என தேவ பூதகணம்
வியந்து அறுசுவை உணவு உண்டிட

கண்டிலாத பல சீர்வகை வந்திட
எண்ணிலாத நவரத்னம் குவிந்திட
மண்டலம் புகழ்ந்திட எங்கும் காணாத
மாபெரும் திருநாள் மதுரைத் தலமதில் (தோரண)



You can enjoy the song below:




"கள்வரே! கள்வரே!"




My daughter Mahima Natarajan gave a dance performance
at Saint-Gobain Glass India Ltd.
Samuha 2013 Cultural Competition
for the song "Kalvare! Kalvare!" ("கள்வரே! கள்வரே!")
from the movie "ராவணன்.”

She was awarded the First Prize!


You can watch the "Kalvare! Kalvare!" video below:

Thursday, May 15, 2014


Pondicherry - Give time a break!


This is a brief documentary on Pondicherry (Now: Puducherry), a small town in India which was a French colony before Indian Independence.

Thanks to the Interviewees in this film:

1. Dr. Radja P.
(Head of the Dept. of English, Tagore Arts College, Pondicherry -
A veteran writer in English an Tamil)

2.Puduvai Ra. Rajini
(National Award Winner for Short story -
And he is also my own youngest brother)

Pondicherry - Give time a break...

Script
Photography
Dialogue
Narration
Production

Nirmal Natarajan
(My son)



You can watch the documentary "Pondicherry - Give time a break..." below:


ராகங்கள் பல நூறு



சில கர்னாடக  மற்றும்  ஹிந்துஸ்தானி இசை ராகங்களுக்கு உள்ள
தொடர்புகளைக் கீழே காணலாம்.

கர்னாடக 'கல்யாணி' ராகம் ஹிந்துஸ்தானியில் 'யமன்' என்று கையாளப்படுகிறது. கர்னாடக 'தோடி'தான் ஹிந்துஸ்தானியில் 'பைரவி என்று அழைக்கப்படுகிறது.

அதுபோல, கர்னாடக இசையின்
மோஹனம், ஹிந்துஸ்தானியில் பூபாளி என்றும்,
ஹிந்தோளம் , மால்கௌன்ஸ் என்றும்,
சங்கராபரணம், பிலவால் என்றும்,
சுபபந்துவராளி, தோடி என்றும்,
சக்கரவாகம், ஆகிர் பைரவ் என்றும்,
தேவகாந்தாரி, பீம்ப்ளாஸி என்றும்,
ப்ருந்தாவன சாரங்கா, ஹமீர் என்றும்,
சுத்த சாவேரி, துர்கா என்றும்,
நட பைரவி,   அசாவரி என்றும்,
சஹானா, ஜேஜேவந்தி  என்றும்,
தர்மாவதி, மதுவந்தி என்றும்,
ஹம்சாநந்தி, மார்வா என்றும்,
பந்துவராளி, பூர்வி என்றும்,
மாயாமாளவகௌளை, பைரவ் என்றும்,
ஹரிகாம்போஜி, கமாஜ் என்றும்,
கரஹரப்ரியா,  காபி என்றும்,
கம்பீர நாட்டை, திலங் என்றும்,
வலஜி, கலாவதி என்றும்,
முகாரி, ஜோன்புரி  என்றும்
அழைக்கப்படுகின்றன.

ஆனால், மேற்கண்ட ராகங்களின் ஆரோகண, அவரோகணங்கள், இரண்டு இசைகளிலும் ஏறத்தாழ ஒன்றாக இருந்தாலும், பாடலைப் பிரயோகிக்கும் முறையிலும், கமகப் பிரயோகங்களிலும், பாடும் பாணியிலும், இசையை வெளிப்படுத்தும் விதத்திலும் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன.

சில ராகங்களின் பெயர்கள், இரண்டு இசைகளிலும் ஒன்றாக இருந்தாலும்,
ஒன்றுக்கொன்று துளியும் சம்பந்தமில்லாமல் இருக்கின்ற வினோதத்தையும் காண முடியும்.

எடுத்துக்காட்டாக, தோடி என்ற பெயர் கர்னாடகம், ஹிந்துஸ்தானி என்ற இரண்டிலும் இருந்தாலும், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை. ஹிந்துஸ்தானி தோடி என்பது, கர்னாடக சுபபந்துவராளிக்குச் சமம் ஆகும். இரண்டு  முறைகளிலும் பைரவி என்ற பெயர் இருந்தாலும், இரண்டும் முரண்பட்டவை. கர்னாடக தோடிக்கும், ஹிந்துஸ்தானி பைரவிக்கும் ஒற்றுமை உண்டு. ஆனால் ஹிந்துஸ்தானி லலித் ராகமும், கர்னாடக லலிதா ராகமும் வேறு வேறானவை.

ஆனால், சில ராகங்கள், இரண்டு இசை முறைகளையும்  பொறுத்த மட்டில், தனித்துவம் பெற்று விளங்குகின்றன.  கர்நாடக இசை ராகங்களான பைரவி, வராளி, சுருட்டி, பேகடா, தன்யாசி, அடாணா, நாயகி, நாட்டக் குறிஞ்சி, கௌளை போன்றவைகளுக்கு மிகச் சமமான ராகங்கள்  ஹிந்துஸ்தானியில்  இல்லை.

அதே போல, ஹிந்துஸ்தானி ராகங்களான  மியான் கீ மல்ஹர், பகாடி, கௌட் சாரங்,  சய நாட், சங்கரா, மரு சிஹாக், ராம்களி, திலக் கமோட் போன்றவைகளுக்குச் சமமான கர்னாடக ராகங்கள் இல்லை.


அசட்டு ராஜா

"கல்கி" பத்திரிக்கைக் குழுமத்தைச் சேர்ந்த
"கோகுலம்" சிறுவர் பத்திரிக்கையில்
(dated 21-01-1973) வெளிவந்தது!


Click on the Page you want to read!



போட்டி

"கல்கி" பத்திரிக்கைக் குழுமத்தைச் சேர்ந்த
"கோகுலம்" சிறுவர் பத்திரிக்கையில்
(dated 15-10-1972) வெளிவந்தது!


Click on the Page you want to read!


Monday, May 12, 2014


ஒரு வார்த்தை பல அர்த்தம்



செய்யுள்:


கரியே! கரிகரிக்கக் கரியுண்டி கரிக்கப்போய்
கரியாலே கரியாகக் கரித்தாயே எனக்கரித்துக்
கரிந்திட்டுக் கரிநிறத்துக் கரிபோலும் கரியான்தன்
கரிணிக்குக் கரியாலே கரிசெய்து கரில்செய்யும்!


”கரி! கரி!” என்று கரித்துக் கொட்டிய இந்தச் செய்யுளின் அர்த்தமாவது: