Wednesday, June 11, 2014


பச்சிலைச் சாறும் பயன்பாடும்


அருகம்புல் சாறு – இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்; வாய்ப் புண் ஆற்றும்;
மற்றும் தாய்ப்பால் சுரக்க உதவும்.

வாழைத் தண்டுச் சாறு – சிறுநீரகக் கல்லை அகற்றக் கூடியது; மூட்டு வலியை நீக்கும்; உடல் எடையைக் குறைக்கும்; ஊளைச் சதையைக் குறைக்க உதவும்.

வெள்ளைப் பூசணிச் சாறு – குடற் புண்ணை நீக்கும்.

வல்லாரைச் சாறு – நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும்; ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

வில்வச் சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது; நரம்பு
சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் உகந்தது; சர்க்கரையின் அளவைக் குறைக்க வல்லது; சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுவது.

கொத்தமல்லிச் சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.

புதினாச் சாறு – இருமலைக் குணப்படுத்தும்; முகப் பருவை நீக்க வல்லது; மற்றும் அனைத்து ரத்த சம்பந்தமான, வாயு சம்பந்தமான நோய்களுக்கும் ஏற்றது.

நெல்லிக்காய்ச் சாறு - அழகு தரும் மருந்து.

துளசிச் சாறு - சளி மற்றும் சோம்பேறித்தனத்தைக் குறைக்க வல்லது. ஆனாலும் ஓர் எச்சரிக்கை! அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்ளுவது விந்தணுவைக் குறைத்துவிடும்.

அகத்திச் சாறு- மலச்சிக்கலைக் குணப்படுத்தும்; சர்க்கரை நோயைக் குணப்படுத்தும்.

கடுக்காய்ச் சாறு - முகம் நல்ல பொலிவாகும்; கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது.

முடக்கத்தான் சாறு - மூட்டு வலிக்கு நல்லது; வாயுத் தொல்லைக்கு
நல்லது.

கல்யாண முருங்கைச் சாறு - உடல் எடையைக் குறைக்க உதவும்; இதை
வாயில் மென்று உமிழ் நீருடன் கலந்து சாப்பிட்டால், உடனடியாக
மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை நீங்கும்; ஆனாலும் ஓர்  எச்சரிக்கை! கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது இல்லை; கருவைக் களைக்கக் கூடியது.

தூதுவளைச் சாறு - சளித் தொல்லை நீங்கும்.

ஆடாதொடைச் சாறு - 'ஆஸ்துமாவைக்' குணப்படுத்த வல்லது.

கரிசலாங்கண்ணிச் சாறு - கண் பார்வைக்கு நல்லது; முடி வளர்ச்சிக்கு நல்லது.


Thanks: http://aanmikam.blogspot.in

No comments:

Post a Comment